ஐபிஎல் இன்றைய போட்டி: சென்னை – ஐதராபாத், மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதல்

 

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டங்களில் சென்னைஐதராபாத்மும்பைராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்   தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில்  இன்று மாலை 4 மணிக்கு புனேயில் நடக்கும் 46–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதவுள்ளன. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் சென்னை அணி 2–வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், டோனி தலைமையிலான சென்னை அணி பிளேஆப்சுற்றை உறுதி செய்து விடலாம். வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி,  9 வெற்றி, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் பிளேஆப்சுற்றுக்கும் முன்னேறி விட்டது.  ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே தங்களது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Posts