ஐபிஎல்: இன்றைய லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் – பெங்களூரு, ஐதராபாத் – கொல்கத்தா அணிகள் மோதல்

 

 

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளும், ஐதராபாத் – கொல்கத்தா அணிகளும் மோதவுள்ளன.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இதுவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மீதமுள்ள இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மீதமுள்ள 4 லீக் ஆட்டங்கள் முடிவுகளே, ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் எஞ்சிய இரு அணிகள் எவை என்பதை தீர்மானிக்கும். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில், ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஐதராபாத் – கொல்கத்தா அணிகளும் மோதவுள்ளன. இந்த ஆட்டங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது,  

Related Posts