ஐபிஎல் கிரிக்கெட்: இன்று கொல்கத்தா- மும்பை அணிகள் மோதல்

 

 

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு இந்தப்போட்டிகள் நடைபெற உள்ளன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு, சென்னை அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய கொல்கத்தா அணி, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. கடைசியாக பெங்களூரு அணியிடம் தோல்வி கண்ட மும்பை அணி அடுத்து வரிசையாக பஞ்சாப், கொல்கத்தா அணிகளை சாய்த்து வெற்றி கண்டது. மும்பையிடம் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு சொந்த மண்ணில் பழிதீர்க்க கொல்கத்தா அணி முழு வீச்சில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 8மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Posts