ஐபிஎல் கிரிக்கெட் இன்று கோலாகல தொடக்கம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது.

மும்பை, ஏப்ரல்-07 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுள்ள நிலையில்,  11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 27-ந்தேதிவரை இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடைபெறுகிறது. 2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. அவற்றோடு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts