ஐபிஎல்: டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

 

 

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் களமிறங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்த் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணியில், தொடக்க வீரர் ஹேல்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சிகார் தவான் – வில்லியம்சன் அதிரடியாக ரன் குவித்தனர். 18 புள்ளி 5 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. சிகார் தவான் 92 ரன்களும், வில்லியம்சன் 83 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள ஐதராபாத் அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தொடர் தோல்விகளால் டெல்லி அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது.

Related Posts