ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

பஞ்சாப் : மே-14

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தூரில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த பஞ்சாப் அணி தற்போது திணறிக்கொண்டிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4–ல் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி, சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் குறைந்தது 2–ல் வெற்றி பெற்றாக வேண்டும். பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளியுடன் 7–வது இடம் வகிக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை அந்த அணி பெற முடியும். இரு அணிகளுமே வெற்றிக்கு போராடும் என்பதால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

Related Posts