ஐபிஎல்: பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்

 

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய 11-வது ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளின் நேரத்தை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது. இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள்  7 மணிக்குத் தொடங்கும் என்றார். எட்டு மணி போட்டிகள் முடிவடைய கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி வரை ஆவதால் பார்வையாளர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு 7 மணிக்கு மாற்றம் செய்துள்ளதாக ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

Related Posts