ஐபிஎல்: பெங்களூரை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

 

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

மும்பை, ஏப்ரல்-18

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 52 பந்தில் 94 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்துநின்று விளையாடி 92 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts