ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி 

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்த்து. 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Related Posts