ஐபிஎல் போட்டி: கிறிஸ் கெய்ல் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணிக்கு 3வது வெற்றி

 

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

ஏப்ரல்-20

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மொகாலியில் நடைபெற்ற  16-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.பஞ்சாப் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை பஞ்சாப் அணி குவித்தது. 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே தடுமாறத் தொடங்கினர்.  20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் மட்டுமே எடுத்த ஐதராபாத் அணி, 15 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.

Related Posts