ஐபிஎல் 20 ஓவர் போட்டி: இன்று ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்

 

 

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 39-வது லீக் ஆட்டம்,  ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது. இதில், ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி உள்ளது. எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts