ஐபிஎல் 2018: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எது?

 

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆஃபுக்கு இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் ஆகிய 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. மற்ற இரண்டு அணிகள் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. இதற்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது கடைசி லீக் போட்டியில் எதிரணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதேபோல், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுவது அவசியம். அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வருகிற 20-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Related Posts