ஐ ஆம் பேக்: அறுவை சிகிச்சைக்குப் பின் அர்னால்ட் சொன்ன முதல் வார்த்தை

 

 

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்னேகர்  இருதய வால்வு அறுவைசிகிச்சைக்குப் பின் நினைவு மீண்டு கண்களைத் திறந்தவுடன் முதல் வார்த்தையாக ‘ஐ ஆம் பேக்’ என கூறியிருக்கிறார்.

ஏப்ரல்-2

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேகர். ‘டெர்மினேட்டர்’, ‘பிரிடேட்டர்’ படங்களின் வரிசைகள் மூலம் உலக புகழ்பெற்ற இவர், இரண்டு முறை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். அர்னால்டுக்கு இருதய வால்வில் சிறு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று ஆபரேஷன் நடந்தது. ஏற்கெனவே, கடந்த 1997-ம் ஆண்டு இவருக்கு இதய தமனி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருபது ஆண்டுகளாக நலமாக இருந்த அவர், திடீரென மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்ட தமனியை மீண்டும் மாற்றும் சிகிச்சை தான் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் டேனியல் கூறினார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின் நினைவு வந்து எழுந்த அர்னால்டு உச்சரித்த முதல் வார்த்தைகளே, ‘ஐ அம் பேக் (I am back)’ என்ற அவரது ட்ரேட்மார்க் வசனம் தானாம்.

Related Posts