ஐ.எஸ்.எல் 2019

ஐ எஸ் எல் 6 வது சீஸனின் 17 வது லீக் போட்டி!

மும்பையை வென்றது கோவாவின் எஃப் சி அணி

ஐ எஸ் எல் கால்பந்து போட்டியில்  6 வது சீஸனில் 17 வது லீக் போட்டியில் கோவா மும்பை அணிகள் மும்பையில் மோதின. துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டத் தொடங்கியது கோவாவின் எஃப் சி அணி போட்டியின் 27 வது நிமிடத்தில் கோவா அணியின் வீரர் ரோட்ரிக்ஸ் முதல் கோலை அடித்தார்.

45 வது நிமிடத்தில் பெர்ரன் இரண்டாவது கோலை அடிக்க ,கோவா அணி 2-0 என்ற நிலைமையில் முன்னிலை வகித்தது. இவ்வாறு முதல் ஆட்டத்தில் கோவா அணியின் கை ஓங்கியே நின்று இருந்தது. இதற்கிடையே இரண்டாம் பாதியில் கோல் அடித்தே ஆக வேண்டும் என்று குறிக்கோளுடன் விளையாடிய மும்பை 49 வது நிமிடத்தில் சர்தாக் மும்பை அணி சார்பாக முதல் கோலை அடித்தார். இது மும்பை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.மும்பை அணியின் சக்கரபர்த்தி கால்பந்தை   55 வது நிமிடத்தில் அற்புதமாக கோலடித்தார். இதனையடுத்து 2 – 2 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது .

இதன்பின் அனைவரும் மிகுந்த ஆரவாரத்துடன் போட்டியை கவனித்து வந்தனர். கோவா அணி கோலை அடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஆடி வந்த நிலையில் கோவாவின் பவுமாஸ் 59 வது நிமிடத்தில் மூன்றவது கோலை அடித்தார். இதனையடுத்து  மும்பையின் கோல் அடிக்கும் முயற்சி அனைத்தும் வீணானது . கோவா அணியின் கார்லோஸ்  வீரர் 89 வது நிமிடத்தில் 4 வது கோலை அடித்தார். இறுதியில் கோவா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

Tags
Show More

Related News

Back to top button
Close