ஐ.நா. பொதுச்செயலாளர் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஐ.நா. பொதுச்செயலாளர் 4 நாள் பயணமாக அக்டோபர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் ஓரா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் இரண்டாம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று இதற்காக நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அக்டோபர் 1-ம் தேதி இந்தியா வருகிறார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளும், பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டின் துவக்க நாளுமான அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் சர்வதேச துப்புரவு கருத்தரங்கிலும் அன்ட்டோனியோ குட்டரஸ் கலந்து கொள்கிறார். மேலும், இந்தியாவின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அக்டோபர் மூன்றாம் தேதி அன்ட்டோனியோ குட்டரஸ் துவக்கி வைக்கிறார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts