ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றிபெற வேண்டி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா திருப்பதியில் இன்று சாமி தரிசனம் 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ந்தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். இதேபோல் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்

Related Posts