ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் 

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி சாம்பியன்பட்டம் வென்றது.

Related Posts