ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில், சென்னை – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை : மே-27

எட்டு அணிகள் பங்கேற்ற 11வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டாண்டு தடைக்குப் பிறகு திரும்பிய சென்னை அணி, 3வது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஷர்துல் தாகூர், பிராவோ, இங்கிடி ஆகியோரின் பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக விளங்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் இருக்கும் ஹைதராபாத் அணி 2வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. வில்லியம்சன், ஷிகர் தவான், மணீஷ் பாண்டே ஆகியோரின் பேட்டிங்கும், ரஷீத் கான், சித்தார்த் கவுல் ஆகியோரின் பந்துவீச்சும் அந்த அணிக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Posts