ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில், கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா : மே-23

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு வெளியேற்றுதல் சுற்று நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில், 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது. முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டம் பரபரப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts