ஐ.பி.எல். போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும், போட்டிகளை புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-09

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்துவதா, வேண்டாமா? என்பதை கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். ஐ.பி.எல். போட்டிகளை நடத்தாமல் இருந்தால் நல்லது. போட்டி நடந்தால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். போட்டிகளை புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும். போட்டியை நிறுத்த யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Posts