ஐ.பி.எல். யின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் கடந்த 7–ந் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஐ.பி.எல். மகுடத்தை மீண்டும் வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Posts