விளையாட்டு

ஐ பி எல் லில் இனி 15 விளையாட்டு வீரர்கள்

பிசிசிஐ அதிரடி முடிவு

இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் ஒரே விளையாட்டு  ஐபிஎல் கிரிக்கெட்.இதில் இந்த ஆண்டு புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதன் விளைவாக  சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக பவர் ப்ளேயர் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. முதலில் இதனை சோதனை முயற்சியாக உள்ளூர் தொடரான முஸ்தாக் அலி டிராபி போட்டிகளில் அறிமுகப்படுத்தவுள்ளனர். காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றை ஐபிஎல் போட்டிகளில் தளர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி-20 கிரிக்கெட் தற்போது பேட்ஸ்மேன்களின் கிரிக்கெட்டாக மாறி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 200 ரன்கள் எல்லாம் அசால்டாக அடிக்கிறார்கள். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் பணக்கொழிக்கும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பிசிசிஐ கொண்டுவரவுள்ள இந்த முறையால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

கிரிக்கெட்டை  பொறுத்தவரையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடும் லெவனை அறிவிக்க வேண்டும். அதாவது அந்தப்போட்டியில் விளையாடவுள்ள 11பேர் கொண்ட பட்டியலை வெளியிட வேண்டும். அதுபோக அணியில் சப்ஸ்யூட் வீரர்கள் இருப்பார்கள். போட்டிகளின் போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சப்ஸ்ட்யூட் களமிறங்குவார். அவர் ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியுமே தவிர பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் போன்ற பணிகளில் ஈடுபட முடியாது. இதுதான் காலங்காலமாக இருக்கும் விதிமுறை இதில் தான் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.

Show More

Related News

Back to top button
Close