ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமமைச் செயலர் உத்தரவு

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, நெல்லை ஆணையராக இருந்த பாஸ்கரன் சென்னை மாவட்ட செயலாக்கத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமனம், ரங்கராஜன் குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை பெருநகர குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக எஸ்.ரங்கராஜன், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக ரிஷா பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts