ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதலமைச்சர் பழனிச்சாமி

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஒகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 117 பேர் மாயமாகினர். மீட்பு பணி மேற்கொண்ட போதும் மீனவர்கள் குறித்து தகவல் தெரியவில்லை.

இதையடுத்துமாயமானவர்கள் உயிரிழந்ததாக கருதி 177 பேரின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் நிதியுதவியை தமிழக முதல்வர் வழங்கினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்களில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதன்படி முதற்கட்டமாக 10 பேருக்கு  கல்வித்தகுதி அடிப்படையில் பணிநியமனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts