ஒகேனக்கலல் ஆடிப் பெருக்கு விழா : 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

ஒகேனக்கலில் ஆடிப் பெருக்கு நிறைவு விழாவில் 212 பயனாளிகளுக்கு சுமார் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,  வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடி பெருக்கு நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில்  நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு  212 பயனாளிகளுக்கு  சுமார் 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத்தொடர்ந்து தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்விழாவில் சார் ஆட்சியர் சிவனருள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts