ஒடிசாவில் நடத்தப்பட்ட அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவில் நடத்தப்பட்ட அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

         ஒடிசா கரையோரப் பகுதியில் அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக  நடத்தியுள்ளது. இந்த அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை  பாலிஸ்டிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. காலை 8.05 மணியளவில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச்  வீலர் தீவு என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த அதிநவீன இடைமறி ஏவுகணை சோதனை நடை பெற்றது. இது குறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஏவுகணையின் வருகை குறித்து ரேடார் மூலம் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை பிருத்திவி பாதுகாப்பு சாதனத்துடன் இணைக்கப்பட்ட கணினி துல்லியமாக கணித்தது எனவும், இதன்பின்னர், அந்த கணினியில் இருந்து உத்தரவு வெளியிடப்பட்டதும், பிருத்திவி பாதுகாப்பு சாதனத்தில் இருந்து ஏவப்பட்ட இடைமறி ஏவுகணை, நடுவானில் எதிர்ப்பக்கத்தில் இருந்து வந்த ஏவுகணையை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்துள்ளது. எதிர் பக்கத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறி ஏவுகணை தாக்கி அழித்த துல்லியத் தன்மையை பல்வேறு நிலையங்களில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்ததாகவும்,இதற்கு முன்பு, இதே ஏவுதளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாகவும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள்  கூறியுள்ளன.

Related Posts