ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை

கோபால்புர் அருகே இன்று அதிகாலை தயே புயல் கரையைக் கடந்ததையடுத்து ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியது. அந்த புயலுக்கு தயே என்று பெயரிடப்பட்டது. இது ஆந்திரப்பிரதேசத்தை ஒட்டிய ஒடிசாவின் கோபால்புர் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது. கரையைக் கடந்த தயே புயல், மேற்கு வடமேற்காக நகர்ந்து மெல்ல பலவீனமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. மேலும் புயலின் தாக்கம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் நாளை காலை வரை கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கடல் பகுதி மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts