ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பணியாற்றும்:   கனிமொழி

அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிபாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்ம்முக வேட்பாளர் புவனேஸ்வரன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  திமுக வேட்பாளர் கனிமொழி,ஒடுக்கப்பட்டதாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர் எனவும், . அவரின் பிறந்த நாளில் அவருடைய உருவ சிலைக்கு திமுகசார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுவதாகவும் கூறினார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக எனவும், அந்த பணியை பெரியார்,அண்ணாருணாநிதியின் வழியில் திமுக தொடர்ந்துமேற்கொண்டு  வருவதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.

Related Posts