ஒதுக்க வேண்டிய மானியத் தொகைகளை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய மானியத் தொகைகளை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தார். அப்போது, 14வது மத்திய நிதி ஆணையத்தின் கீழ்  தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும், ஆயிரத்து 196 கோடியே 27 லட்ச ரூபாய் செயலாக்க மானியத்தொகையை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், மூவாயிரத்து 780 கோடியே 81 லட்ச ரூபாய், அடிப்படை மானியத் தொகையினை விடுவிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை – பெங்களூரு இண்டஸ்டிரியல் காரிடாரை, கோவை வரை விரிவுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.  கோவை-டெல்லி இடையே தினசரி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிடுமாறு நிர்மலா சீதாராமனிடம், எஸ்.பி.வேலுமணி மனுக்களையும் வழங்கினார்.

Related Posts