ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறப்பு

மாட்டு வண்டித்தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் பலனாக வேலூரில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மாட்டு வண்டி மணல் குவாரிகள் திறக்கப்பட்டது.

தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் மாட்டு வண்டி மணல்குவாரி அமைக்க உத்தரவிட்டு 6 மாதங்களுக்கு பின்னர், இன்று மாட்டு வண்டி மணல்குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டி ஒன்றிற்கு 105 ரூபாய் செலுத்தி மணல் எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

தற்போது நாட்டு வண்டி அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ஒரு மாட்டு வண்டி வீதம் மணல் வழங்கப்படும். இதனால் ஆயிரத்து 100 மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலூர் உள்பட பல மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் மாட்டு வண்டி குவாரிகள் மூடப்பட்டிருந்ததால், கட்டுமான பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தங்களுக்கு குவாரி அமைத்து தர வேண்டுமென மாட்டு வண்டித்தொழிலாளர்கள் பல கட்டபோராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts