ஒப்பந்தம் அடிப்படையில்  ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி

6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில்  ஆயிரத்து 474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

            பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்டன் கீழ் மத்திய அரசு வழங்கிவரும் நிதி மூலம் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரண்டு மணி நேரம் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

            இந்நிலையில், 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, 6 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில்  ஆயிரத்து 474  தற்காலிக முதுகலை ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 7 ஆயிரத்து 500 ரூபாய்  வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts