ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையை அனைவரும் ஏற்பார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனது கருத்துகளை குடும்பத்தினர் உதவியுடன் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்று , தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள கருத்தில், தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையை அனைவரும் ஏற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, இந்தி மொழி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், நாடு முழுவதும் இந்தி மொழியை முதன்மையான மொழியாக மாற்றப்படும் என்று கூறிய சிதம்பரம், தற்போது சிறையில் இருக்கும்போது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

Related Posts