ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


ஈரோடு மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பாசிச, சர்வாதிகார பாஜக ஆட்சியை அகற்றவே தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக கூறினார்.

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி துக்ளக் தர்பார் நடத்துகிறார் என்று குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி, தற்போது எம்ஜிஆர் போல் தன்னை நினைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார் என கூறினார்.  காவல்துறை வாகனங்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

(பைட்)

கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் சண்முகம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Posts