ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வெங்காய விலை உயர்வு

வெங்காயத்தின் விலை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்காயம் அதிகம் விளையும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது  ஒரு கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தில் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், விலை அதிகரித்திருப்பது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts