ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு விடைபெறும் நேரம் வந்துவிட்டம்

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு, உலகம் கூட விடைபெறும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது, காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கத்தை, உலகம் எதிர்கொள்கிறது என்பது, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார். கடல் மட்ட உயர்வு, அலை போக்கு,  ஒழுங்கற்ற மழை, புயல்கள் மற்றும் தட்ப வெப்பநிலையால் ஏற்படும் மணல் புயல்கள் ஆகியவற்றால், காலநிலை மாற்றம் பல்வேறு வகையான நில சீரழிவுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை, வரும் ஆண்டுகளில் இந்தியா முடிவுக்கு கொண்டுவரும் என்று உறுதிபடக் கூறிய அவர், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு உலகம் கூட விடைபெறும் நேரம் வந்துவிட்டதாக நம்புவதாகவும் தெரிவித்தார். பருவநிலை மாற்றங்களால் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை, இந்தியாவின் மரம் மற்றும் வனப்பகுதி, 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Posts