ஒவொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்கப்படும்; நடிகர் கமல்ஹாசன்!

ஒவ்வொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்க திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் நிலக்கோட்டை தொகுதி வேட்பாளர் சின்னத்துரை ஆகியோரை ஆதரித்து நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்று தெரிவித்தார். ஒவ்வொருரின் திறமையை கண்டறிந்து அதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார். 40 இடங்களிலும் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

Related Posts