ஒவ்வொரு போட்டியிலும் ஏற்படும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது: விராட் கோலி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சோகம் தொடர்கிறது. அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியதால் கேப்டன் கோலி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். போட்டிக்கு பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய அவர் 160 ரன்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என்று நினைத்த்தாகவும், . சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ரன் தான் இலக்காக நிர்ணயிக்கமுடிந்த்தாகவும் தெரிவித்தார். 2-வது இன்னிங்சில் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமையவில்லை எனவும் இந்த ஆட்டத்தில் தங்கள் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை எனவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும், அதனை பேசுவதும் முறை அல்ல என்ற கோலி நாள்தோறும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது என்றார்.

Related Posts