ஓகி புயல் பாதிப்புகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசணை

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசணை மேற்கொண்டார்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று பிற்பகலில் ஓகி புயலாக மாறி, கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Posts