ஓசூரில் 100 சவரன் நகை கொள்ளை

ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி குடியிருப்பில் ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

100 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனதாக ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். கோவையில் ராமகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  வீட்டில் யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.  நகைகொள்ளை போனது குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts