ஓட்டுனர் சமூகத்தை கேவலமாக நடத்துவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது: ஜூட் மேத்யூ

ஓட்டுனர் சமூகத்தை கேவலமாக காவல்துறையினர் நடத்துவதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்க நிர்வாகி  ஜூட்  மேத்யூ வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவல்துறை அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார் எனவும் இதற்கு காராணமான காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஓட்டுனர் சமூகத்தை கேவலமாக காவல்துறை நடத்துவதாகவும், இதனை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் வாகன ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவல்துறையினர் நாகரீகமாக நடந்து கொள்வதுகிடையாது என அவர் குறிப்பிட்டார்.

Related Posts