ஓமன், ஏமன் நாடுகளில் மெகுனு என்ற புயல் தாக்கியதில் 11 பேர் பலி

ஓமன், ஏமன் நாடுகளில் மெகுனு என்ற புயல் தாக்கியதில், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஓமன் : மே-28

அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாயமான பொதுமக்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் சலாலாவில் உள்ள முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts