ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து: தைவானில் பொது வாக்கெடுப்பு.

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தருவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் வாக்களித்தனர்.  ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என தைவான் உச்சநிதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும் இது தொடர்பாக 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்ட வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இது தொடர்பாக அங்கு நேற்று ஒரு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.. அதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். பொது வாக்கெடுப்பில் 10 கேள்விகளுக்கு பொது மக்களின் கருத்து கேட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கலாமா என கேட்கப்பட்டது. ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராகத்தான் பெரும்பாலானவர்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.  நீதிமன்றத் தீர்ப்பின்படி, தைவான் சட்டம் இயற்றினால், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்கிய முதல் ஆசிய நாடு என்ற பெயர், அந்த நாட்டுக்கு கிடைக்கும். மேலும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறஉள்ள ஒலிம்பிக் போட்டியில், தைவான் என்ற பெயரில் பங்கேற்பதா அல்லது சைனிஷ் தைபே என்ற பெயரில் கலந்துகொள்வதா என்பது குறித்தும் பொதுமக்களின் கருத்து கோரப்பட்டது. தற்போது தைவான், சைனீஷ் தைபே என்ற பெயரில் ஒலிம்பிக் போட்டிகளில்கலந்துகொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts