ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு வயலில் கச்சா எண்ணெய் கசீவு

ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் அங்குள்ள விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு அருகில் உள்ள வெள்ளக்குடி பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் அவை சேமிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செல்வராஜ் என்பவரின் விளை நிலத்தில் உள்ள எண்ணெய் குழாய் உடைப்பால் சுமார் அரை ஏக்கர் அளவுக்கு கச்சா எண்ணெய் பரவியது. வயலின் நடுவே தேங்கி நின்ற எண்ணெய், நீண்ட நேரமாக கொப்பளித்தபடி இருந்தது.

வயலின் பெரும்பகுதியை இந்த எண்ணெய் கசிவு தாக்கியுள்ளதால் இந்த நிலத்தை இனி விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியாது எனவும், மண்ணை முற்றிலுமாக மாற்றினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் எனவும் கூறப்படுவதால் இந்த சம்பவம் அங்குள்ள மற்ற விவசாயிகள் இடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts