ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்க்கு எதிர்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி  தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில்  சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் மேல்முறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  அதில்  இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி  தரப்புக்கு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த  மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சசிகலா, டி.டி.வி.தினகரனின் கோரிக்கையை நிராகரித்து  தீர்ப்பளித்தது.    இந்த தீர்ப்பை எதிர்த்து  டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சி பெயரை அனுமதித்து தேர்தல் ஆணையம் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், சின்னம் ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில், தினகரன் தொடர்ந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி. தரப்புக்கு ஒதுக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி. தரப்புக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts