ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக மேல்முறையீடு

 

 

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அரசு கொறடா உத்தரவை மீறியதாக  ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 27-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக திமுக இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts