கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயரும் : சவுதி அரேபியா எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயரும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடந்த 14 ஆம் தேதி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஈரான்தான் காரணம் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணமில்லை என தெரிவித்துள்ள ஈரான், ஏமன் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீது உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால், நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என அவர் எச்சரித்துள்ளார். ராணுவ நடவடிக்கையைக் காட்டிலும், அமைதி மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியது அவசியம் என்றும் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts