கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Want create site? Find Free WordPress Themes and plugins.

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஒன்றான  வெனிசுலாவில் அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின்னர்  அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார்.. கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே,, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இதற்கு அமெரிக்காவும், தென் அமெரிக்க நாடுகள் சிலவும் அங்கீகாரம் அளித்துள்ளன.. வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நடவடிக்கையால், கடும் அதிருப்தியடைந்த அதிபர் நிகோலஸ் மடூரோ, அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா  மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த வெனிசுலா பெட்ரோலியத்துறை அமைச்சர், மேனுவல் குவாவிடோ செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மிகச் சிறந்த நல்லுறவு உள்ளதாகவும்,. கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட இந்தியாவுடனான வணிக உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்றார். இதுகுறித்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறுகையில்,  வெனிசுலா நாட்டு மக்களுக்குச் சொந்தமான வளங்களைப் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும்,  வெனிசுலாவின் வளங்களைத் திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கக் கூடாது”எனவும் தெரிவித்து உள்ளார்.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts