கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம்: தமிழக முதல்வர்

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு செய்துவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் தங்கி முழு நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளதாக தெரிவித்தார். 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81 ஆயிரத்து948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,.  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.. கஜா புயலால் சேதடைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும்,. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலால் அதிகளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கஜா புயலால் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது எனவும்  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம்ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அவர் கூறினார். 110 கி.லோ மீட்டர் வேகத்தில் வீசிய கஜா புயலால் நாகையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் மத்திய அரசிடம் நிதி கோரப்படும் எனவும், கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எப்பொழுதும் சேதத்திற்கான முழு நிதியை  மத்திய அரசு கொடுத்ததில்லை என்றார்.

Related Posts