கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கினார் அமைச்சர் காமராஜ்

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிவட்டம் வடபாதிமற்றும்  கண்டமங்கலம் கிராமத்தில் கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தார்பாய் உள்பட 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவராண தொகுப்புகளை  902 பயனாளிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.“பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்கள் மீண்டும் பொருளாதாரத்தில மேம்பாடு அமைந்திட அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன்,வருவாய் கோட்டாட்சியர் பத்மாவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts