கஜா புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு அஞ்சலி  செலுத்தும் வகையில்  பட்டுக்கோட்டையில் நடைபெற்றபேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கஜா புயலில் சாய்ந்த தென்னைகளுக்கு அஞ்சலி  செலுத்தும் வகையில்  பட்டுக்கோட்டையில் நடைபெற்றபேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கீழே சாய்ந்தன. புயல் தாக்கி 30- நாட்கள் ஆன நிலையில், பட்டுக்கோட்டையில் தென்னைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  தென்னங்குருத்துக்களை ஏந்தியபடி  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்வீதிகளில் ஊர்வலம் சென்றனர். அப்போது விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அரசு, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்க வேண்டும், மறுசாகுபடிக்கு தேவையான தென்னங்கன்றுகள் மற்றும் தேவையான பொருட்களையும் நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டன.

Related Posts